Thursday, May 31, 2012

யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் மகத்தான பணி...!

எமது சகோதர இணையத்தளமான “யாழ் முஸ்லிம்” நடாத்தும் கவிதை தொகுப்புக்களின் வெளியீட்டு விழாவையெண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றோம். யாழ்ப்பாண முஸ்லிம்கள், தமிழ்ர் விடுதலை போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமான விடுதலை(?) புலிகளினால் பலவந்தமாக துப்பாக்கி முனைகளில் இரு மணித்தியாலங்களினுல் வெளியேற்றப்பட்ட சம்பவம் தான் “ வடக்கின் துயரம் ”. 

விடுதலை என்ற பெயரில் அடுத்த சிறுபான்மையை இனசுத்திகரிப்பு செய்த கொடிய வரலாற்று நிகழ்வை ஒரு ஆவணமாக காண்பதையிட்டு உவகையடைகின்றோம். அப்துல் ரஹீம், ஹஸ்புல்லாஹ், மொஹிதீன் போன்றவர்கள் இதனை அச்சாக கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கான முகவரியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்காமலாக்கப்பட்டது. 

இப்போது அந்த  தடைகளையெல்லாம் தாண்டி அந்த அகதி மண்ணின் மைந்தர்களினாலேயே அவை ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலக்கிய ஆவணமாக. இந்த மகத்தான பணியை செய்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம். அவர்களின் முயற்ச்சி முழுதாக வெற்றிபெற நாம் அந்த கவிதை புத்தகத்தை வாங்கி படித்து, பிறரிற்கும் கொடுத்துதவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நன்றி.


No comments:

Post a Comment