விடுதலை என்ற பெயரில் அடுத்த சிறுபான்மையை இனசுத்திகரிப்பு செய்த கொடிய வரலாற்று நிகழ்வை ஒரு ஆவணமாக காண்பதையிட்டு உவகையடைகின்றோம். அப்துல் ரஹீம், ஹஸ்புல்லாஹ், மொஹிதீன் போன்றவர்கள் இதனை அச்சாக கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கான முகவரியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்காமலாக்கப்பட்டது.
இப்போது அந்த தடைகளையெல்லாம் தாண்டி அந்த அகதி மண்ணின் மைந்தர்களினாலேயே அவை ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலக்கிய ஆவணமாக. இந்த மகத்தான பணியை செய்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம். அவர்களின் முயற்ச்சி முழுதாக வெற்றிபெற நாம் அந்த கவிதை புத்தகத்தை வாங்கி படித்து, பிறரிற்கும் கொடுத்துதவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நன்றி.


