Sunday, May 13, 2012

யாழ் முஸ்லிம்களே உங்களுடன்.................

ம் தாயக மண்ணின் சகோதரர்களிற்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்கள். “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.................
22 வருடங்களிற்கு முன்பு தேன் கூடு போல் வாழ்ந்த எம் சமூகம், இனச்சுத்திகரிப்பின் பின்னர் உள்நாடென்றும், வெளிநாடென்றும் சிதறிய நெல்லிக்கனிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எம் வாழ்வில் மட்டுமல்லாமல் எம் உள்ளத்தாலும் நாம் பலவாறு பிரிந்து நிற்கிறோம். 

எம் சிதறிய சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் யாழ் முஸ்லிம் ஜமாஅத் என்ற வகையில் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைய வேண்டிய அல்லது ஒன்றிணைக்க வேண்டிய அவசியமும் அவசரமும் இன்று எம் முன்னால் உள்ளது. 
எம்மிடம் பலதரப்பட்ட சித்தாந்தங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், வேறுபட்ட தஃவா அணிகள், அரசியல் அணிகள் என்ற பிரிவிணைகளிற்கும் அப்பால் நாம் யாழ் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய பிரதானமான கடமைகள் நம் முன் உள்ளன.
எம்மை யாழ் மண்ணில் இருந்து வெளியேற்றியது ஒரு தெளிவான இனச்சுத்திகரிப்பே. இதனை வெளியேற்றியவர்களும் அவர்கள் தம் சமூகமும் பின்னர் ஏற்றுக்கொண்டனர். அதற்காக வருந்தினர். அவர்கள் தலைமை அதற்காக வெளிப்படையாக மன்னிப்பும் கோரியது. அவ்வாறான எமது மண்ணில் மீள் குடியேறிவது நமது கடமையாகும். இதற்காக நாம் எம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதும் அதற்காக உதவியாக இருப்பதும் மறுக்க முடியாத மற்றும் மார்க்க ரீதியிலான கடமையுமாகும். 

எம் சமூக உறவுகளே.... நம்மிடம் உள்ள எல்லா வேறுபாடுகளிற்கு அப்பாலும் நாம் ஓர் இஸ்லாமிய சமுதாயம் என்ற அடிப்படையிலும் நாம் ஒன்றிணைவோம். செயல்படுவோம். எம்மோடு நீங்கள் ஒன்றிணைந்து எமது இலட்சிய கனவான இஸ்லாமிய கட்டமைப்பின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை எம் தாயக மண்ணில் உருவாக்குவோம். ஒத்துழைப்போம். நாமும் ஓர் அங்கத்தவராகவும் மாறுவோம். 

எதிர்வரும் நாட்களில் நாம் உங்களுடன் நாம் பல விடயங்களையும் பகிரவுள்ளோம். இன்ஷாஅல்லாஹ்.



No comments:

Post a Comment