Saturday, October 31, 2015

ஒவ்வொரு தமிழரும் பொறுப்புக் கூற வேண்டும்

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய கூட்டத்தில் யாழ்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமேந்திரனின் நியாயமான உரை
வடக்கில் இடம்­பெற்ற ஒரு சோக­மான சம்­ப­வத்தை இன்று நாம் நினைவு கூறு­கின்றோம். வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு முஸ்லிம் இன சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்டு இன்­றுடன் 25 வரு­டங்­க­ளா­கியும் அந்த விட­யங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டாது இன்றும் பழைய விட­யங்­களை நினை­வு­கூரும் நிலைமை மட்­டுமே உள்­ளது. அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இன்று நான் யாழ் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பிர­தி­நி­தி­யாக வெட்­கப்­ப­டு­கின்றேன். வடக்கில் நிகழ்ந்த இந்த சம்­பவம் தமிழ் முஸ்லிம் மக்­களின் உற­வோடு தொடர்­பு­பட்ட ஒன்­றாகும். ஆகவே இந்த விட­யங்கள் குறித்து தமிழ் மக்­க­ளி­னதும் தமிழ் அர­சியல் தலை­மை­க­ளி­னதும் நிலைப்­பாட்டை தெளி­வாக கூற­வேண்­டிய கடமை எனக்கு உள்­ளது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் மீண்டும் வட­ப­கு­திக்கு திருப்பி அனுப்­பப்­படும் வரையில் தான் வடக்கில் காலடி எடுத்து வைக்­க­மாட்டேன் என தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அப்­போ­தைய தலைவர் சிவ­சி­தம்­பரம் குறிப்­பிட்டார். அந்த வாக்­கு­று­தியை அவர் இறு­தி­வரை காப்­பாற்­றினார். இறு­தியில் அவ­ரது உடல் மட்­டுமே யாழ்ப்­ப­ணத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எமது அர­சியல் நிலை­மைகள் அவ்­வாறு இருந்­தாலும் தமிழ் மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக இந்த காரி­யத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து முஸ்­லிம்­களை காப்­பாற்ற முயற்­சித்­தி­ருந்தால் விடு­தலைப் புலி­க­ளினால் இவ்­வா­றா­ன­தொரு காரி­யத்தை செய்­தி­ருக்­க­மு­டி­யாது. ஆகவே இவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்­ட­வ­ச­மாக சம்­பவம் நடை­பெற்­ற­மைக்­கான பொறுப்பை ஒவ்­வொரு தமி­ழரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பது எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் பலர் இந்த சம்­ப­வத்­துக்­காக மனிப்­புக்கோ­ரி­யி­ருந்­தாலும் கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடி­யேறி வாழ்­வ­தற்­கான சரி­யான பங்­க­ளிப்பை தமிழ் மக்கள் செய்­ய­வில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாக உள்­ளது. அது உண்­மையுமாகும். ஆகவே தமிழ் மக்­களின் சார்­பாக சில விட­யங்­களை முஸ்­லிம்கள் மத்­தியில் எடுத்து விளக்க நான் விரும்­பு­கின்றேன். அதா­வது எங்­க­ளது மக்­களின் இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச தரப்பில் குர­லெ­ழுப்ப நினை­கின்றோம். ஆனால் அந்தக் குரல் முழு­மை­யாக சர்­வ­தேச மட்­டத்தில் செல்­லாது தடைப்­ப­டவும் இது ஒரு கார­ண­மாகும். அதா­வது எங்­க­ளது நிலத்தில் இருந்த முஸ்­லிம்­களை இன சுத்­தி­க­ரிப்பு செய்­தமை இதற்கு பிர­தான கார­ண­மென பல தட­வைகள் நான் தெரி­வித்­துள்ளேன். இவ்­வாறு நான் கூறும் சந்­தர்­பங்­களில் எமது கட்­சியின் ஒரு­சில தரப்பில் இருந்து எதிர்ப்­புகள் எழுந்­தன. அதா­வது இவ்­வா­றான கருத்­துக்­களை பரப்­பினால் எமது மக்கள் மத்­தியில் உங்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைந்­து­விடும் என்றும் தெரி­வித்­தனர். ஆனால் நான் அதற்­காக அஞ்­ச­வில்லை. தொடர்ந்தும் அந்த கருத்­துக்­களை எமது மக்கள் மத்­தியில் தெரி­வித்து வந்தேன். எனினும் இந்த கருத்­துக்­களை விளங்­கிக்­கொண்ட தமிழ் மக்கள் எனது கருத்­துக்­களை தெளி­வாக விளங்­கிக்­கொண்டு என்னை பாரா­ளு­மன்றம் வரையில் அனுப்­பி­யுள்­ளனர்.

ஆகவே இது­வ­ரையில் எனது உரையில் தமிழ் மக்கள் செய்­தி­ருக்க வேண்டும் என்ற சில விட­யங்­களை தெரி­வித்தேன். ஆனால் இப்­போது அதை­விட ஒரு மாறு­பட்ட கருத்தை நான் தெரி­விக்க விரும்­பு­கின்றேன். இந்தக் கருத்­துக்­களை கேட்­ப­தற்கு சில­ருக்கு கஷ்­ட­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களின் குர­லாக சில­வற்றை வெளிப்­ப­டுத்­தலாம் என நினைக்­கின்றேன்.

நாங்கள் நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­வ­தானால் அதற்­கான முதற்­கட்­ட­மாக எமது தவ­று­களை உணர்ந்து அவற்றை திருத்­திக்­கொள்ள வேண்டும். அபோ­துதான் நல்­லி­ணக்­கத்தின் இரண்­டா­வது படிக்கு செல்ல முடியும். ஆகவே இப்­போது வரையில் இரண்டு தரப்­பிலும் எழுந்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு சில முக்­கிய கார­ணி­களும் உள்­ளன. தமிழ் மக்­களின் எண்­ணங்­க­ளாக இவை தொடர்ந்தும் பர­வி­வ­ரு­கின்­றன. அதா­வது முஸ்லிம் மக்­களால் எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­களை முஸ்லிம் தலை­வர்கள் கவ­னத்தில் கொள்­ளா­தது ஏன் என்ற கேள்வி தமிழர் மத்­தியில் உள்­ளது. முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறும் சில விட­யங்கள் உள்­ள­போ­திலும் முஸ்லிம் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான சில விட­யங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளன. குறிப்­பாக இலங்­கையில் இடம்­பெற்ற தமிழர் இன அழிப்பை சுட்­டிக்­காட்டி ஐக்­கிய நாடுகள் சபையில் நாம் தெரி­வித்த சந்­தர்ப்­பத்தில் அது தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனி­வாவில் பேசப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அர­சாங்க பிர­தி­நி­தி­யாக அங்கு சென்று விசா­ர­ணை­களை தடுக்கும் வகையில் கருத்­துக்­களை தெரி­வித்தார். ஆனால் தம்­புள்ளை, அளுத்­கம பகு­தி­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது அந்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எழுத்­து­மூல முறைப்­பாட்டை அவர் ஐக்­கிய நாடுகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த செயற்­பாட்டை தமி­ழர்கள் ஒரு காட்­டிக்­கொ­டுப்பு செய­லா­கவே கரு­து­கின்­றனர்.

அதேபோல் நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது, நல்ல மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யென்றால் முன்­னைய அர­சாங்கம் தீயது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அந்த தீய அர­சாங்­கத்­திலும் முஸ்லிம் தலை­மைகள் இறு­தி­வ­ரையில் இருந்து அமைச்­சர்­க­ளாக செயற்­பட்­ட­னரே அவ்­வாறு இருக்­கையில் இப்­போது மாற்றிக் கதைக்­கின்­றனர் என்ற குழப்பம் மக்கள் மத்­தியில் உள்­ளது. ஆகவே இவை அனைத்தும் மக்கள் மத்­தியில் குழப்­பத்­தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான் இந்த கசப்பான உண்மைகளை தெரிவிக்க முக்கிய காரணம் என்னவென்றால் நாம் இரண்டு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சில உண்மைகள் வெளிவரவேண்டும். அவ்வாறு இவற்றை மறைத்து ஒருபோதும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்து செயற்பட முடியாது.

ஆகவே தமிழ் மக்கள் விட்ட தவறுகள், அவர்கள் செய்த அநீதிகள் தொடர்பிலும் நான் எப்போதும் பேசுவேன். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பிரச்சினை 25 ஆண்டுகள் அல்ல தொடர்ந்தும் பல காலம் இருக்கும்.

யாழ் முஸ்லிம்களின் ஏக்கம் கவிதையாய்

1996ல் சரிநிகர் பத்திரிகையிலும்,தனது கவிதைத் தொகுப்பிலும் யாழ் அஸீம் பதிவிலிட்ட கவிதை இது,யாழ் முஸ்லிம் மக்களின் ஏக்கம் இங்கே கால்நூற்றாண்டாய் ஒலிக்கின்றது.
விடுதலைப்புலிகளை இன்றும் ஆதரிப்போருக்கும்,தமிழ் நண்பர்களுக்கும்,தமிழ் டயஸ்போராக்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.
யாழ் அஸீம் அவர்களுக்கு எம் நன்றிகள்.*****

இது கவி­தை­யல்ல;
கற்கள்
இத­யத்­தி­லி­ருந்து
இத­யத்­திற்கு வீசும்
கவிதைக் கற்கள்
பாலஸ்­தீனப் போரா­ளியின்
கையி­லுள்ள
கல்லைப் போல்
காயப்­ப­டுத்தும்
உட­லை­யல்ல
உள்­ளத்தை!

இழந்த மண்­ணுக்காய்
ஏங்கும் இத­யத்தின்
ஏக்கப் பெரு­மூச்­சுக்கள்!
இப்­போது நினைத்­தாலும்
இதயம் சுடு­கி­றது – இல்லை
இதயம் எரி­கி­றது.
அக்­டோபர் முப்­பதில்
அன்று வைத்த நெருப்பு
இன்றும் எரி­கி­றது.
இப்­போது நினைத்­தாலும்
இதயம் எரி­கி­றது.

என் பிரிய நண்­பர்­களே!
அக்­டோபர் முப்­பது
அன்­றைய தினம்
நெஞ்­சிலே உள்­ளதா?
எம் வாழ்வுச் சிற்­ப­மதை
சிதைத்த சிற்­பி­களே!
அன்­றைய தினம் 
நெஞ்­சிலே உள்­ளதா?
அக்­டோபர் புரட்­சியில்
அரிச்­சு­வடி படித்து
வீரமாய் விளைந்த நீங்கள்
சோரம் போன – அந்த
அக்­டோபர் முப்­பது
நெஞ்­சிலே உள்­ளதா?

எங்கள் தலை­வி­தியை 
இரு­ம­ணி­ நே­ரத்தில்
மாற்றி எழு­திய
இரக்­க­மில்­லாத எழுத்­தா­ளர்­களே!

ஜின்னா மைதா­னத்தில் 
அன்று நீங்கள்
ஆடிய விளை­யாட்டு
எங்கள் விதி­யோடு
ஆடிய விளை­யாட்டு!
சகு­னிக்கே
சவால் விட்ட
சதி­கார விளை­யாட்டு
அன்று கூறிய வார்த்­தைகள்
இன்றும் எதி­ரொ­லிக்­கி­றது
“இரு மணி நேரம் தரு­கிறோம்
உயி­ருடன் உங்­களை 
விடு­கிறோம்.
எல்லாம் உங்கள் நன்­மைக்கே
எடுப்­பதை எடுத்துப் 
புறப்­ப­டுங்கள்
எல்லாம் நாமே காத்­தி­டுவோம்
இனி­யொரு நாளில் 
அழைத்­தி­டுவோம்”

நாவிலே பூங்­கொத்து
நெஞ்­சிலே நச்சு விதை…
எப்­படி முடி­கி­றது?
உங்­களால்…..!

இரு மணி நேரத்தில்
எங்கள் பயணம்
இத­யத்தில் பாரத்­தோடு
கைக­ளிலே பார­மின்றி
ஆரம்­ப­மா­னது…
அந்த இடியும் வீழ்ந்­தது.
இப்­போது நினைத்­தாலும்
இதயம் சுடு­கி­றது.
இப்­போது நினைத்­தாலும்
இதயம் எரி­கி­றது…
வழி­ய­னுப்­பி­வைத்த நீங்கள்
வழி­ம­றித்து நின்­றீர்கள்!

பொன்னும் பொருளும் 
எமக்கே சொந்தம்
ஈழத்தைக் கடப்­ப­தற்கு
இரு­நூறு போது­மென்று
அத்­த­னையும் அப­க­ரித்தீர்
அக­தி­களாய் அனுப்பி வைத்தீர்!!

பொரு­ளோடு செல்­க­வென 
அரு­ளோடு கூறி­யதும்
இரு­ளோடு இத­யத்தில்
எம்­கு­றுக்கே நின்­றதும்
நீங்கள் தானோ நண்­பர்­களே!
தோளிலே போட்ட கை
தோழ­மை­யென நம்­பினோம்
தோழர்­களே – ஆனால்
அது
கழுத்­துக்கு வைத்த
குறி­யென
கன­விலும் நினைக்­க­வில்லை.

எல்­லாமே அப­க­ரித்து
ஓடென்று விரட்டி விட்டீர்....
வீடி­ழந்தோம் – எம்
மண் இழந்தோம்....
வீதி­யெங்கும் அலை­கின்றோம்.
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
கூடியே படித்தோம்
கூடியே வாழ்ந்தோம் – பின்
கோடி­களைப் பறித்­த­துமேன்?
தேடியே பார்க்­கிறோம்
தவறு தான் புரி­ய­வில்லை

காட்டிக் கொடுத்துக்
கயமை புரிந்­தோமா?
கூடி இருந்து
குழி­ப­றித்­தோமா?

இத­யத்தைத் தொலைத்த
என்­ன­ருமை நண்­பர்­களே!
ஏன் இப்­படி 
எம் வாழ்வில்
தீ வைத்­தீர்கள்! 
இத­யமே இல்­லா­த­வராய்
எப்­படி மாறி­னீர்கள்?!
இத­யத்­தோடு
இத­யமாய்
இணைந்­தி­ருந்த – நீங்கள்
எதி­ரி­களாய் – எமை
எண்­ணி­யதும் ஏனோ! 

இத­ய­மற்­ற­வரா… நீங்கள்
இல்­லவே இல்லை.
எங்­க­ளுக்குத் தெரியும்
இரண்­டறக் கலந்து – எமை
நேசித்த நீங்கள்
இத­யத்தைத் தொலைத்­தது
இடையில் தான்…
என்­னுயிர் நண்­பர்­களே!
ஏன் தொலைத்தீர் இத­யத்தை 
ஏன் அழித்தீர் எம் வாழ்வை…

புத்­த­ளத்து மண்­ணிலே
அகதி முகாம்­களில்
ஆயிரம் அவ­லங்கள்! 
உப்புச் சுமக்கும் – என்
உடன் பிறப்­பு­களின்
கண்ணீர் ஈரம்
இன்னும் காய­வில்லை
இத­யத்தில் நீங்கள் 
மூட்­டிய நெருப்பு
இன்னும் எரி­கி­றது – ஆனால்
நீங்கள் வைத்த நெருப்­புக்கு
நீங்­களே எரி­வதை
உண­ர­வில்­லையா? 
நண்­பர்­களே!

ஏழைகள் அழுத கண்ணீர்
கூரிய வாளை ஒக்கும்
அக­திகள் அழுத கண்ணீர்
அணு­குண்டை 
மிகைத்து நிற்கும்!
கிழிந்த வாழ்க்­கையை
உடுத்துக் கொண்­டி­ருக்கும்
என் கிரா­மத்து மக்­களைப்
பார்த்த பின் கூட
பாசம் பிறக்­க­வில்­லையா?

பகலில் கூட இருண்­டு­விட்ட
எம் வாழ்க்­கையில்
வெளிச்சம் தெரி­யாத
விடி­யல்­களில்
ஒளி­தேடும் எம் வாழ்க்­கையைக்
கண்ட பின் கூட
கண்ணீர் சுரக்­க­வில்­லையா?

என­த­ருமை நண்­பர்­களே – 
உங்கள்
இதயம் இரும்­பா­னது எப்­போது?
ஈனச் செயல் புரியும்
கோழைத்­தனம்
குடி­பு­குந்­தது எப்­போது
இப்­போ­தும்­கூட
இத­யத்தால் கேட்­கிறோம்
உங்கள் உர­மான
நெஞ்­சத்­த­ரையில்
கோழைப் பயிர்கள்
எப்­படி முளைத்­தன?
கோழைப் பயிர்­களில்
நச்­சுக்­க­னி­களை – ஏன்
அறு­வடை செய்­தீர்கள்?

வீர­மிகு சாத­னைகள்
நீர்­பு­ரிந்த கால­முண்டு
விழுப்­புண்கள் பல பெற்று 
வீர வர­லாற்­றுக்கு
வெற்றி பல சேர்த்­த­துண்டு
வீர­மிகு தோழர்­களே – உங்கள்
விழுப்­புண்ணில்
சீழ் பிடித்­த­தெப்­போது?
என்­ன­ருமை 
நண்­பர்­களே – உங்கள்
இரும்­பான இத­யத்தில்
துருப்­பி­டித்­த­தெப்­போது?

சிறு­பான்மை 
உரி­மைக்குப் போராட்டம் – மறு
சிறு­பான்மை
இனம் மீது வெறி­யாட்டம்
சிறு­பான்மை எம் உரிமை
சிறு­பான்மை எம் உடமை
சிறு­பான்மை எம் உணர்வை
சிதைத்து விட்ட போராட்டம்….

போராட்டப் பாதை­யிலே
மாறாட்டம் தோன்­றி­யதால்....
இணைந்­தி­ருந்த இரு இனங்கள்
இரு திசையில் பிரிந்­த­னவே…

ஒரு தாயின் பிள்­ளைபோல்
உயி­ருக்குள் உயிராய்
ஒன்­றாக வாழ்ந்­தி­ருந்த
இனிய தமிழ்ச் சோத­ரரே!
இத­யத்தால் 
இணைந்­தி­ருந்தோம்….

இன்­பத்தில்
துன்­பத்தில்
இரண்­டி­லுமே 
இணைந்­தி­ருந்தோம்…

தீபா­வளி எங்கள் பெருநாள்...
ரம்ஸான் உங்கள் பெருநாள்…
பிரி­வில்லை என்­றி­ருந்தோம்…
பேதங்கள் மறந்­தி­ருந்தோம்...
பேய்க் காற்று வீசி­யது
பேரி­டியும் வீழ்ந்­தது.
இணைந்த நம் கரங்கள்
நம் கரங்­க­ளா­லேயே
வெட்­டப்­பட்­டன.

ஒட்டி வாழ்ந்த உற­வு­களை
வெட்டி வீழ்த்­திய
வீரர்­களே!
இஸ்­லா­மியத் தமி­ழ­ரென
எமை அழைத்தீர்!

இப்­போது 
எந்த வகைத் தமி­ழ­ரென
எம்மை வெறுத்தீர்!

காரணம் தான் புரி­ய­வில்லை
காருண்ய தோழர்­களே!

வடக்­கிலே பிறந்­தது குற்­றமா?
வாஞ்­சை­யுடன் 
வாழ்ந்­தது குற்­றமா?
இஸ்­லா­மி­யனாய் 
பிறந்­தது குற்­றமா?
இனிய தமிழ் பேசி­யது குற்­றமா?
தோள் கொடுத்­தது குற்­றமா?
தோழ­மை­யோடு 
வாழ்ந்­தது குற்­றமா?
ஒட்டி வாழ்ந்­தது குற்­றமா?
உதவி வாழ்ந்­தது குற்­றமா?
குற்­ற­மென்ன கூறுங்கள்
நண்­பர்­களே!
குற்­ற­மென்ன கூறுங்கள்!

எங்கள் கதையை
இரு மணி நேரத்தில்
மாற்­றி­யெ­ழு­திய
இரக்­க­மற்ற எழுத்­தா­ளர்­களே

எழுதிச் செல்லும்
வீதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
எழு­தியே வைத்தான்
உமர் கையாம்
நீங்கள்
முடிக்கத் தெரி­யாமல்
எழு­திய சிறு­கதை
எங்கள் கதை…

எந்தக் கதைக்கும்
இறுதி முடிவை
எல்­லோ­ருக்கும் எழு­து­பவன்
இறை என்னும் எழுத்­தாளன்
முற்றும் என நீர் முடித்தீர்
நீர் முடித்­தது
முதல் அத்­தி­யாயம்
தொட­ரு­மென அவன் எழுதும்
தொடர்­க­தையைப் 
புரிந்து கொள்வீர்...

உற­வுகள் என்றும் 
அழி­வ­தில்லை
உண்மை அன்­புக்கு 
என்றும் அழி­வில்லை
உற­வுகள் வெட்­டிய போதும்
அது மீண்டும் துளிர்க்கும்
உயி­ருக்குள் உயி­ரான
இனிய தமிழ்ச் சோத­ரரே
இப்­போதும் 
எம்­மண்­ணிலே
உம் அன்­பிலே 
இணைந்­திடத் துடிக்­கின்றோம்!

எம் மண்­ணிலே வாழ்ந்­திட
மண் மடி­யிலே மடிந்­திட எம்
தாய­கமாம் வடக்­குக்கு
தவழ்ந்து விளை­யாடி
எம் தாய் மண்ணின் கால­டிக்கு
மீண்டும் வரத் துடிக்­கிறோம்

நாம் வருவோம்
மீண்டும் வருவோம்
விழு­து­களைத் தானே
வெட்­டி­னீர்கள் வீரர்­களே
வேர்­களை அல்­லவே!

இனிய தமிழ்ச் சோத­ரரே
ஆழமாய் வேரோ­டிய – நம்
அன்புப் பிணைப்பு – அது
என்றும் அழிக்க முடி­யா­தது
என்றும் பிரிக்க முடி­யா­தது

இத­யத்­தோடு இயதம் சேர
உயி­ரோடு உயிர் சேர
உற­வு­களை உயிர்ப்­பிக்க
நாம் வருவோம்

மீண்டும் வருவோம்...
துப்பாக்கி 
தோட்டாக்கள்
எதுவுமின்றி நாம் வருவோம்

ஏந்துகின்ற
எங்கள் கைகள்
இறைவனையே 
நோக்கியெழும்
எங்கள் கைகளிலும்
இரு ஆயுதம் –
அன்பு ஒரு ஆயுதம்
இறை பிரார்த்தனை
மறு ஆயுதம்

எங்கள் ஆயுதம்
தோட்டாக்களைக் கக்காது
வேட்டுக்களைத் தீர்க்காது
எங்கள் ஆயுதம்
இயங்கும் அந்த நாளில்
துப்பாக்கி தூரப்போகும்
தோட்டாக்கள் பூக்கள் ஆகும்!

அப்போது
நாம் வருவோம்
மீண்டும் வருவோம்
தூசுகளாகப் பறந்த நாம்
பாறைகளாய் மீண்டும் 
வருவோம்!

விதைகளாக வீழ்ந்த நாம்
விருட்சங்களாய் 
மீண்டும் எழுவோம்

எம்
தாயகமாம் வடக்குக்கு
தலைநிமிர்ந்து 
நாம் வருவோம்!

Thursday, October 15, 2015

அன்னைகு சமர்ப்பணம்

அன்புத்தாய்மாருக்கு இது சமர்ப்பணம்
----------------
எவள் இல்லையென்றால் நான் இல்லையோ எவளை இழந்து விட்டால் என்னால் மீண்டும் பெற முடியாதோ அவளே என் தாய்‌.நான் நினைக்கின்றேன் தாய் என்பதற்கு இது மிகச் சிறந்த வரைவிலக்கணம் என்று,தாயின் மடியே பிள்ளையின் பள்ளிக்கூடம்,பல்கலைக் கழகம் என்பார்கள்.அது உண்மைதான் அதனால்தான் முகம்மது நபி(ஸல்) சொன்னார்கள் தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதென்று, நாம் ஒவ்வொருவரும் நமது அடிமனதை ஆழமாக தட்டிப்பார்த்தால் கண்டுகொள்வோம், நமது தாயிடமிருந்து இயல்பாகவே நமக்குள் பழகிப்போன சில நடைமுறைகள்,பழக்கவழக்கங்கள்,பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் இவை நாம் மரணிக்கும் வரை நம்மை விட்டு அது  ஒரு நாளும் அகலப்போவது இல்லை.நமது தாய் நமக்கு சொல்லித் தந்த பல விடயங்கள்,நல்லது எது,கெட்டது எது,எதை உண்ணலாம்,எதை உண்ணக்கூடாது,எங்கே,எவரோடு,போகலாம்,பழகலாம்,எந்த உறவினரோடு கூடுதல் பழகலாம் என்பதெல்லாம் நமக்குள் ஊறிப்போனது நமது தாயூடாகத்தான்.எனவே தாய்மார்களே! குறிப்பாக இளம் தாய்மார்களே நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளின் முதலும்,முற்றிலுமான பள்ளிக்கூடம்,பல்கலைக் கழகம் என்பதை உங்களுக்குள் நினைவுறுத்துக் கொண்டு செயற்படுங்கள்.
பிள்ளைகள் கற்கும் பாடங்களும்,கற்கைநெறிகளும்  நீங்கள் கற்றிருக்கவே ண்டு மென் பதில்லை, அவை தெரியாமலேயே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் முதல் ஆசானாக,வழிகாட்டியாக இருக்கலாம்,இருக்க வேண்டும்

சரி,இனி காதி என்பவர் பதிவிட்டதை படியுங்கள்
( நன்றி சகோதரர் காதி அவர்களுக்கு(
   பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்"

உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....

இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......

அதில் இப்படி எழுதியிருந்தது

"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்" என்று......

இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டயரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " #மூளை_வளர்ச்சியற்ற_தாமஸ் ஆல்வா_எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்க முடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைங்க..