Saturday, May 26, 2012

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை


 தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி தெரிவித்தார்.

குறித்த மஸ்ஜித் மற்றும் மதரஸா தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது அதில் பெளத்த பேரினவாதிகள் பெளத்த பிக்குகள் வழிகாட்டலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் குறித்த மஸ்ஜித் மற்றும் மதரஸா பிரதேசத்தின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமாக உறவை கொண்டுள்ளது. நோன்பு காலங்களிலும் ஏனைய காலங்களிலும் முஸ்லிம்களுக்கு வழங்கப் படும் அனைத்து வகையான உணவு வகைகளும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் வழங்கப் பட்டு வந்துள்ளது என்று தாருர் ரஹ்மானின் பிரதம நிர்வாகி மேலும் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
இணைப்பு -2: இதுவரை குறித்த தாருர் ரஹ்மான் மஸ்ஜித் வக்பு சபையில் பதிவு செய்யபட்டுள்ளதா ? என்பது தொடர்பில் நிர்வாகிகள் மத்தியில் ஐயம் நிலவியது எனினும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது . தற்போது குறித்த தாருர் ரஹ்மான் மஸ்ஜித் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. என்றும் இதன் காரணமாக மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் சட்ட ரீதியான இருப்புக்கான ஆதாரம் முழுமையாக உள்ளதாக தாருர் ரஹ்மான் மஸ்ஜித்தின் உதவித் தலைவர் தெரிவித்தார் .
மேலும் அவர் எமக்கு வழங்கிய தகவலில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருதரப்பு கூடத்திற்கு போதுமான சகல சட்ட ஆதாரங்களுடன் தாம் செல்லவுள்ளதாகவும். முஸ்லிம் தரப்பில் 20 பேரும் , ஆர்பாட்டகாரர்கள் தரப்பில் 20 பேரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் சிரேஷ்ட அமைச்சர் பௌசி , ஆளுநர் அலவி மௌலானா , அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கும் குறித்த பிரச்சினை தொடர்பாக விக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பலரும் மஸ்ஜித் இருப்பை எந்த வகையிலும் விட்டுகொடுக்க வேண்டாம் என்று தமது நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்று முன்னர் தொடர்பு கொண்டு முழுமையான விபரங்களை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment