“யாழ் முஸ்லிம்” இணைய தளத்தில் (http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_8907.html ) வெளியாயகிய “யாழ்ப்பாணத்தில் காணிகள் விற்பனைக்கு (முழு இணைப்பு)” என்ற பதிவு பற்றி பேச வேண்டியுள்ளது. யாழ் முஸ்லிம் இணையம் அதனை என்ன நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது என்பதனை நாம் அறியோம்.ஆனால் அதில் சில பிரச்சனைகள் உருவாவதற்கான ஒரு நிலை தோன்றியுள்ளதையிட்டு கவலையடைகின்றோம்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் காணி விற்பனை தொடர்பான விலை பட்டியல் எவ்வாறு இணையங்களின் கைககளிற்கு சென்றது?. இதை அனுப்பி வைத்தவர் யார் என்பதும் எமக்கு தெரியும்.
யாழ் சம்மேளனம் தரகர்களுடன் பேசிய கூட்டத்தில் ஒரு பிரபல தரகரால் தரப்பட்ட காணி விற்பனை விபர பட்டியலே இன்று இவ்வாறு பிரசுரமாகியுள்ளது. தரகர்களை விற்காதீர்கள் என நாம் தடுத்து விட்டு காணியின் முழு விபரங்களையும் தேர்வு செய்து, தெரிந்தெடுத்து வாங்க நாம் பட்டியல் சமர்ப்பிப்பது எந்த விதத்தில் விவேகமானது சரியானது?
காணி விபரங்கள் தொடர்பான பட்டியல் யாழ் மற்றும் ஏனைய பிரதேச முஸ்லிம்களை சென்றடைய வேண்டுமேயல்லாது, எம் நிலங்களை ஏப்பம் விடும் சக்திகளையல்ல.
நல்லது செய்ய நினைத்து பிரச்சனைகளை பெரிதாக்கி கொள்வது உசிதமல்ல. நாம் எதையும் சற்று நிதானமாக ஆலோசித்து, வெளியிடுவதே சாலச்சிறந்தது. இணையங்களில் வெளியிடுபவர்கள் மட்டுமன்றி அதனை இணையத்தளங்களிற்கு வழங்குபவர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்கள் விடும் தவறால் பாதிக்கப்படப்போவது இவர்கள் அல்ல. யாழ் முஸ்லிம் சமூகமே. இது எமது கருத்து மட்டுமே. யாரையும் குறை கூறி அவர்களது செயற்பாட்டை மழுங்கடிப்பதல்ல நோக்கம்.
இனியாவது சிந்திப்போம்
M.M.M. AJMAL - Chief Editor
No comments:
Post a Comment