Wednesday, November 11, 2015

பாராளுமன்ற நிலையியற்கட்டளைகள்

நிலையியற் கட்டளைகள்

பாராளுமன்ற கூட்டங்களின் போது நிலையியற் கட்டளை மீறப்பட்டது என உறுப்பினர்கள் இடைமறிப்பதும்,அதனூடாக கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதும் என படி த்திருப்பீர்கள் இலங்கை பாராளுமன்ற கூட்டங்களில் அதிகமாக ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய சாதனையாளர் என்ற புகழ் முன்னால் உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களையே சாரும்.இனி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்ன என பார்ப்போம்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் எனப்படுவது உடன்பட்ட விதிகளாகும். இவற்றின் கீழ் நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன ஒழுங்கமைக்க்ப்ப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, பாராளுமன்றத்தினை சீரான அமைதியுடைய, காத்திரமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை கொண்டு இயங்க வகுத்துரைப்பதாகும். நிலையியற் கட்டளைகள் பாராளுமன்ற நடவடிக்கைகளின் மிக முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவனவாகவும் உள்ளன. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் நிலையியற் கட்டளைகளுக்கு விதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நூல் நிலையத்தில் காணப்படுகின்ற பதிவுகளின்படி நிலையியற் கட்டளைகளின் முதலாவது தொகுதி அப்போதைய சட்டவாக்கச் சபையினால் 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரித்தானிய பாராளுமன்றத்தை இவை அடிப்படையாகக் கொண்டமைந்தன. அதன் பின்னர் பாராளுமன்ற வரலாற்றிலே பல்வேறு கட்டங்களிலே அத்தகைய புதிய நிலையியற் கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்பாடு செய்யலாமென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 74ஆம் உறுப்புரை குறிப்பிடுகின்றது. முன்னர் நடைமுறையில் இருந்த நிலையியற் கட்டளைகளுக்குப் பொருத்தமான மாற்றங்களை மேற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள நிலையியற் கட்டளைகள், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் கட்டமைக்கப்பட்டு, 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. சபையினால் காலத்திற்குக் காலம் நிலையியற் கட்டளைகளுக்குத் திருத்தங்கள் கொண்டுவர முடியும். 123ஆம் நிலையியற் கட்டளையின் கீழ், நிலையியற் கட்டளைகள் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும்.

 

இக்குழுவானது சபாநாயகர் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் வேறு ஆறு உறுப்பினர்களை உள்ளடக்கியதாகக் காணப்படும். பாராளுமன்றத்தின் அலுவல் தொடர்பான நடைமுறை, ஒழுங்கு ஆகிய விடயங்களைப் பரிசீலிப்பதும், நிலையியற் கட்டளைகளில் திருத்தங்கள் அவசியமெனக் கருதுகின்ற விடயங்கள் தொடர்பான விதப்புரைகளை மேற்கொள்வதும் நிலையியற் கட்டளைகள் குழுவின் பணியாகும். எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரேரணைகளை அவை தொடர்பான முன்னறிவித்தலுடன் குழுவிற்கு ஆற்றுப்படுத்தலாம். குழுவானது அவற்றைப் பரிசீலனை செய்து தனது அறிக்கையில் உள்ளடக்கலாம். இவ்வறிக்கையானது முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகச் சபையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

பொதுத் தேர்தல் ஒன்றின் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத்தின்பொழுது மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள், உறுப்பினர் இருக்கை ஒழுங்கு, சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்தல், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம், கூட்டங்களுக்கான திகதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயித்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதாகத் தற்போதைய நிலையியற் கட்டளைகள் தொகுதி காணப்படுகிறது. கூட்ட நடப்பெண், பாராளுமன்ற அலுவல்கள் போன்றனவும் கூட நிலையியற் கட்டளைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவசரச் சட்டமூலங்களுக்கான நடைமுறைகள், தனியார் உறுப்பினரின் சட்டமூலம், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், வாக்களித்தல் போன்றனவும் நிலையியற் கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டுள்ளன. விவாதத்திற்கான ஒழுங்கு விதிகள், பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள், உரையாற்றா உறுப்பினர்களுக்கான விதிகள் மற்றும் பாராளுமன்றத்தில் ஒழுங்கு போன்ற விடயங்களை நிலையியற் கட்டளைகள் தெளிவாக நெறிப்படுத்துகின்றன.

 

சனாதிபதி, நீதிபதிகள் மற்றும் ஏனைய உயரதிகாரிகள் ஆகியோருக்கெதிரான குற்றப் பிரேரணையின்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நிலையியற் கட்டளைகளில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே, பாராளுமன்றச் செயலாளர் நாயகம், கணக்காய்வாளர் தலைமை அதிபதி, தேர்தல்கள் ஆணையாளர், நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் ஆகியோரை அவர்களின் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பான ஏற்பாடுகளும் அவற்றில் உள்ளன.

 

முழுப் பாராளுமன்றக் குழு, தெரிகுழுக்கள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சபைக் குழு, தெரிவுக் குழுக்கள், நிலையியற் கட்டளைகள் குழு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு, அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு, பொது மனுக் குழு, சிறப்புரிமைகள் மற்றும் உயர் பதவிகள் பற்றிய குழு போன்றவற்றின் அலுவல்களை நடத்துவதற்கான வழிகாட்டல்களை நிலையியற் கட்டளைகள் கொண்டுள்ளன.

 

தேவையானபொழுது பிரேரணையொன்றின் மூலம் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைக்கும் அதிகாரம் சபைக்கு உண்டு. சபையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நிலையியற் கட்டளைகளில் எதுவும் குறிப்பிடப்படாதவிடத்து, அவ்விதமான விடயங்களைச் சீராக்குவதற்குரிய எஞ்சிய அதிகாரம் சபாநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது

Friday, November 6, 2015

ACJU Vs. ACTJ

         ACJU vs ACTJ அறிக்கைகளும் ,எமது உணர்வுகளும்
########-----########
அண்மைய நாட்களில் ACJU:,ACTJ, விடுகின்ற அறிக்கைகள்,அனுப்புகின்ற கடிதங்கள்,அதையொட்டி வேறுசிலரின்அறிக்கைகளஎன்பன எனக்குள் ஏற்படுத்திய உணர்வலைகள் இப்பதிவினை வெளியிட வைத்துள்ளது  முரண்பாடுகளும்,கருத்து வேறுபாடுகளும் உலகில் மனித வாழ்க்கை இருக்கும் வரைஎல்லாவிடயங்களிலும் இருக்கும் இது இயற்கையின் உலகப் பொதுநியதி. இது தவிர்க்க முடியாத ஒரு விடயம்.இதற்குள் சிக்கி நமது சமூகம் சிதைவை சந்திப்பதற்கு முன்
தேவையான ஒருகலந்துரையாடலுக்கான களம்,சகல சந்திப்புக்களுக்குமான ஒரு அறை இருக்க வேண்டும்.நிராகரிப்பதும் முரண்பட்டு விலகிநிற்பதும்,தொடர்புகளைதுண்டித்துப்பதும்அறிக்கை,மறுப்பறிக்கை என வெளியிடுவதும், மூன்றாம் தரப்பினருக்கு காட்டிகொடுப்பதும்,அத்தகையவர்களை ஏவி விடுவதும் ஆரோக்கியமான பாதையல்ல, இவ்வாறு முரண்பட்டு நிற்பதும்,அறிக்கை,மறுப்பறிக்கை என வெளியிடுவதும் என்பதானது,நீண்டகால அவதானிப்பில் சாதாரண மக்கள்எல்லாஜமாஅத்களையும்விட்டு விலகிச்செல்லவும்,உயர்சபைகள் மீதான நம்பிக்கையை இழந்து அவற்றிற்கு கட்டுபடாமல் ஒரு புதிய சமூக வாழ்க்கை ஒழுங்குமுறைக்குள் வாழவும்என்றநிலைமையை தோற்றுவிக்கும்  அவ்வாறான ஒரு சமூகநிலை உருவாகுவதற்கு முன்னர் முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள் விழித்துகொள்ளவேண்டும்இன்று எழுந்துள்ள இந்த முரண்பாடும் ,அறிக்கைகளும் நமக்கு புதியவை அல்ல ,இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்,வெவ்வேறுஅமைப்புக்களுக்குள்,ஜமாஅத்களுக்குள்,இதைவிடமோசமாக,பள்ளிவாசலுக்குள்ளாகவும்,வெளியாலும்எனஅடிதடிகள்,எரிப்புக்கள்,எதிரெதிர் அறிக்கைகள் எனகண்டிருக்கின்றோம்,நேரடியாக அனுபவித்தும் இருக்கிறோம் ஆனால் அன்றையகாலமும்,நம்மைச்சுற்றியிருந்த களநிலையும் வேறு ,
இன்றைய காலமும் களநிலையும் வேறு.எப்போது இந்த சமூகம் சறுக்கும், தள்ளி வீழ்த்தி விடுவோம் என ஒரு கூட்டம் நம்மை சுற்றி வளைத்து நிற்கிறது.இந்தத்தளத்தில் இருந்துதான் நாம் சிந்திக்க வேண்டும் சீர்திருத்த த்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்
இயக்கவெறியும்,உயர்சபைகளின் பக்கச்சார்பானதும்,மேலாதிக்க கர்வமும் கொண்ட செயற்பாடும் என்ற கசப்பான உண்மைகள் நமக்குள் முனுமுனுக்கின்ற விடயமாக இருக்காமல் சிந்தனையாளர்களின் கலந்துரையாடல் தளத்திற்கு முன் வைக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும்,என்ன விலை கொடுத்தும் ஒற்றுமை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
இயக்கங்களுக்கொரு பள்ளிவாசல்,இயக்கங்களுக்கொரு மத்ரஸா ,இயக்கங்களின் ஆளுமையுள்ள ஊர்கள் என்ற நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்
சமூகசிந்தனையாளர்களேஇந்த மாற்றத்தை உருவாக்குவது இலகுவான விடயமல்ல எந்த இயக்கங்களும்,ஜமாஅத்களும்,உயர்சபைகளும் விட்டுக்கொடுப்புக்கும்,தாராள சிந்தனை மாற்றத்திற்கும் உடனடியாக சம்மதிக்கப் போவதுமில்லை.
ஆனால் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி தமக்குள் ஒரு கலந்துரையாடல் தளத்தை உருவாக்கிக் கொண்டு அத்தகைய சிந்தனயை  மக்கள் மத்தியிலும் விதைத்துக் கொண்டு ஒற்றுமைக்கான படிகளை ஒவ்வொன்றாக கட்ட வேண்டும். இங்கே சிந்தனையாளர்களின் கொள்கைக்கும் வழிமுறைகளுக்கும் ஆதரவான அழுத்தங் கொடுக்கக் கூடிய ஒரு மக்களணியும் இருக்கும், இயங்கும் நிலையிலேயே இயக்கங்கள்,ஜமாஅத்கள்,உயர்சபைகள் என்பன ஒற்றுமைக்கான கலந்துரையாடல்தளத்திற்கு வருவார்கள்.
                   முடிவாக சமூக சிந்தனையாளர்களே இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நமது சமூகத்திற்குள்வரஇருக்கின்றஅறிக்கைகளும்,கருத்துக்களும் ஆரோக்கியமாக இருக்கபோவதில்லை.
எனது இந்த பதிவை பத்திரிகைகளில் வெளியிடுவதைவிட இவ்வாறான சமூக வலைத்தள குழுமங்களுக்குள் பதிவிடுவது வினைத்திறன் உடையதாக இருக்கும் என நம்புகிறேன்
சமூகவலைப் பதிவுகள் எகிப்திலும்,டுனீசியாவிலும் புரட்சிகளை உருவாக்க வழிசமைத்ததென்றால் ,நமது சமூகவலை பதிவுகளும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க வித்திடட்டும்.
நல்லாட்சியை கொண்டுவர ஒரு சிந்தனை கொண்ட குழு முன் வந்தது போல்,நமது சமூக மாற்றத்திற்கும் ஒரு சிந்தனையாளர் குழு உருவாகட்டும்.
மாற்றத்தை நோக்கிய பயனத்தை ஆரம்பிப்போம்
நன்றி. ajmalsedo@gmail.com