அன்புத்தாய்மாருக்கு இது சமர்ப்பணம்
----------------
எவள் இல்லையென்றால் நான் இல்லையோ எவளை இழந்து விட்டால் என்னால் மீண்டும் பெற முடியாதோ அவளே என் தாய்.நான் நினைக்கின்றேன் தாய் என்பதற்கு இது மிகச் சிறந்த வரைவிலக்கணம் என்று,தாயின் மடியே பிள்ளையின் பள்ளிக்கூடம்,பல்கலைக் கழகம் என்பார்கள்.அது உண்மைதான் அதனால்தான் முகம்மது நபி(ஸல்) சொன்னார்கள் தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதென்று, நாம் ஒவ்வொருவரும் நமது அடிமனதை ஆழமாக தட்டிப்பார்த்தால் கண்டுகொள்வோம், நமது தாயிடமிருந்து இயல்பாகவே நமக்குள் பழகிப்போன சில நடைமுறைகள்,பழக்கவழக்கங்கள்,பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் இவை நாம் மரணிக்கும் வரை நம்மை விட்டு அது ஒரு நாளும் அகலப்போவது இல்லை.நமது தாய் நமக்கு சொல்லித் தந்த பல விடயங்கள்,நல்லது எது,கெட்டது எது,எதை உண்ணலாம்,எதை உண்ணக்கூடாது,எங்கே,எவரோடு,போகலாம்,பழகலாம்,எந்த உறவினரோடு கூடுதல் பழகலாம் என்பதெல்லாம் நமக்குள் ஊறிப்போனது நமது தாயூடாகத்தான்.எனவே தாய்மார்களே! குறிப்பாக இளம் தாய்மார்களே நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளின் முதலும்,முற்றிலுமான பள்ளிக்கூடம்,பல்கலைக் கழகம் என்பதை உங்களுக்குள் நினைவுறுத்துக் கொண்டு செயற்படுங்கள்.
பிள்ளைகள் கற்கும் பாடங்களும்,கற்கைநெறிகளும் நீங்கள் கற்றிருக்கவே ண்டு மென் பதில்லை, அவை தெரியாமலேயே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் முதல் ஆசானாக,வழிகாட்டியாக இருக்கலாம்,இருக்க வேண்டும்
சரி,இனி காதி என்பவர் பதிவிட்டதை படியுங்கள்
( நன்றி சகோதரர் காதி அவர்களுக்கு(
பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்"
உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .
எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது
"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டயரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " #மூளை_வளர்ச்சியற்ற_தாமஸ் ஆல்வா_எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.
தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்
நம்மாளும் எடிசன்களை உருவாக்க முடியும்.....
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைங்க..

