Friday, February 27, 2015

மீண்டும் நமது சேவை ஆரம்பிக்கப்படுகின்றது ,நீண்ட மௌனத்தின் பின்

நீண்ட கால மௌனத்தின் பின்னர் எமது  JAFFNA MUSLIM ONLINE  ###  SEDO, எனும் வலைப்பதிவு  ( Blogger ) மீண்டும் செயற்பட எழுகின்றது . நாம் எமது இந்த Blogger ஆரம்பித்த நோக்கம் யாழ் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் ,அதன் அடையாளங்களையும் சமூகஅமைப்பையும்  தொடர்ந்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆவலிலாகும். ஆனால் நாம் ஆரம்பித்த காலத்தில் JAFFNA MUSLIM,, யாழ் முஸ்லிம் என்ற பெயர்களில் பல்வேறு Blogger களும், இனையங்களும் இயங்கத்தொடங்கின .அதனால் நாம் மௌனமாக இருந்தோம்.ஆனால் இன்று மீண்டும் எமது இலக்கை நோக்கிய பயணத்தை தொடர வேண்டிய காலம் ஆரம்பித்துள்ளது என நம்புகிறோம்.யாழ் முஸ்லிம்கள் அவர்களுடைய மண்ணில் இருந்து வாழ்வுரிமைகளையும்,வாழ்வாதாரங்களையும் பலவந்தமாக பறிக்கப்பட்டு 25 வருடங்களாகியும் இன்னும் எத்தகைய ஆக்கபூர்வமான புனர்வாழ்வுத் திட்டத் தையோ அல்லது அவர்களுக்கான மீள்குடியேற்ற திட்டத்தையோ பெறவில்லை அல்லது அனுபவிக்கவில்லை என்பது மிகக்கவலையானதும்,விசனத்துக்குள்ளானதுமாகும்.யாழ்முஸ்லிம்கள்   தமக்கென ஒரு அரசியல் பிரதிநிதியை கொண்டிராததும்,அவர்களுடைய வாக்கு எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் உள்ளதுமே இதற்கான காரணமென நாம் கருதுகின்றோம். ஒரு வகையில் யாழ் முஸ்லிம்கள் அரசியலில் அனாதைகளே.எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் யாழ் முஸ்லிம்கள் விடயத்தில் முன்னுரிமை கொடுத்து செயற்படவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.  ( தொடரும் )                            

Saturday, September 29, 2012

அன்புடன் எம்மண்ணின் உறவுகளே,யாழ், முஸ்லிம்  சமூகத்திற்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், அல்லது  இருக்கின்றது  என்பது ஒரு கசப்பான உண்மையே. அரசியல்  ரீதியான, இஸ்லாமிய அமைப்புக்கள் ரீதியான, மற்றும் பல கொள்கைகள்  ரீதியான வேறுபாடுகள் நம்மை முரண்படவைத்துள்ளன. ஆனால் இவவேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மையேல்லாம் யாழ் முஸ்லிம்  என்னும் ஒரு சகோதர உறவு ,ஒரு சமூகஉறவு நம் உள்ளங்களை ஏதோ ஒரு உணர்வோடு நாடுகின்றது,அல்லது தேடுகின்றது அப்படியானால் நாம் ஏன் இந்த முரண்படுகளுக்கப்பால் ஒரு சில செயற்திட்டங்களுக்காக ஒற்றுமைப்படக்கூடாது. ஒருவருக்கொருவர் சந்தேகமும், இவர் இதைச்செய்வதா என்ற உளப்பாங்கும் நமது  சமுதாயத்தை சீரழிக்கின்றது. என்பதை உணருங்கள்.

Thursday, May 31, 2012

யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் மகத்தான பணி...!

எமது சகோதர இணையத்தளமான “யாழ் முஸ்லிம்” நடாத்தும் கவிதை தொகுப்புக்களின் வெளியீட்டு விழாவையெண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றோம். யாழ்ப்பாண முஸ்லிம்கள், தமிழ்ர் விடுதலை போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமான விடுதலை(?) புலிகளினால் பலவந்தமாக துப்பாக்கி முனைகளில் இரு மணித்தியாலங்களினுல் வெளியேற்றப்பட்ட சம்பவம் தான் “ வடக்கின் துயரம் ”. 

விடுதலை என்ற பெயரில் அடுத்த சிறுபான்மையை இனசுத்திகரிப்பு செய்த கொடிய வரலாற்று நிகழ்வை ஒரு ஆவணமாக காண்பதையிட்டு உவகையடைகின்றோம். அப்துல் ரஹீம், ஹஸ்புல்லாஹ், மொஹிதீன் போன்றவர்கள் இதனை அச்சாக கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கான முகவரியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்காமலாக்கப்பட்டது. 

இப்போது அந்த  தடைகளையெல்லாம் தாண்டி அந்த அகதி மண்ணின் மைந்தர்களினாலேயே அவை ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலக்கிய ஆவணமாக. இந்த மகத்தான பணியை செய்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம். அவர்களின் முயற்ச்சி முழுதாக வெற்றிபெற நாம் அந்த கவிதை புத்தகத்தை வாங்கி படித்து, பிறரிற்கும் கொடுத்துதவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நன்றி.


Saturday, May 26, 2012

கூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்

கூகிள் எர்த் மூலம் நாம் உலகின் எந்தப்பகுதியையும் பார்க்கமுடியும் ..நாடுகள்,நகரங்களில் உள்ள வைத்திய சாலைகள் ,நூலகங்கள் ,போலீஸ்நிலையம் ,வீதிகளின் வரைபடங்கள் என பல விடயங்கள் கூகிள் எர்த் மூலமாக நாம் பார்வையிடமுடியும் ...சிலர் கூகிள் எர்த்தில் தமது நிறுவனங்கள் ,பிரதேசங்களை  பர்வையிடுபவர்களை கவருவதற்கு சில வித்தியாசமான முறைகளையும் கையாளுகின்றார்கள் (மாறுபட்ட  கூகிள் எர்த் ) ஆனால் கூகிள் எர்த் நமக்கு காட்ட விரும்பாத பகுதிகளும் உள்ளன ...சில இடங்கள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன ..சில இடங்கள் ....குறிப்பிட்ட இடங்களை பற்றிய எந்த விபரங்களையும் கொண்டிருக்காது ..உதாரணம் வட கொரியா....அவ்வாறு கூகிள் நமக்கு காட்ட மறுக்கும் பிராதேசங்கள் இதோ .........

மே தினம் - வரலாறும், வெட்கக்கேடும்.


மே தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.

இரண்டாவது உலகயுத்த புகைப்படங்கள்


இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக   21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..
இரண்டாம் உலகப்போரின்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை 
உலகப்போரின்போது கைப்பற்றிய பிரதேசங்களை சோவியத் புகைப்படமாக எடுத்தது ஆனால் இவை அவ்வாறு எடுக்கப்பட்டவை அல்ல உலகப்போரில் பங்குபற்றியவர்களின் பேரன் பேத்திகளினால் தமது தளத்தில் வெளியிடப்பட்டவை 

ப்ரூஸ்லீயின் அரிய புகைப்படங்கள்


சிலரின் பெயர்கள் எம்மத்தியில் நிரந்தர இடத்தை பெற்றுள்ளன சில செயல்களுக்கு சிலரின் பெயர்களை வைத்துள்ளோம் அப்படியானவற்றிற்கு உதாரணம்தான் ப்ரூஸ்லீ முரட்டுத்தனமாக நடக்கும் ஒருவனை பார்த்து நாம் ஆமா உனக்கு ப்ரூஸ் லீ எண்ட நினைப்பு இந்த வார்த்தை உடனேயே வந்துவிடும் 1940 இல் அமெரிக்காவில் பிறந்தவர் ப்ரூஸ்லீ மூன்று வயதில் ஹாங்ஹங் இற்கு இடம்பெயர்ந்து விட்டார் இன்று சீனாவை சேர்ந்த ஒருவர் ஏனோ தானோ என்று கலை தூக்கினால் நிச்சயம் பயம் வரும்

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை


 தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி தெரிவித்தார்.

ஜனாஸா அறிவிப்பு

யாழ்ப்பாணம் சோனக தெருவை பிறப்பிடமாக கொண்ட ஷாஹுல் ஹமீத் அவர்கள் (லெப்பை குட்டி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை பகல் பேருவலையில் மரணமானார். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை பேருவளை மையவாடியில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறியத்தந்துள்ளனர். 

'அமைச்சருக்கு எதிரான மன்னார் கத்தோலிக்கர்களின் கண்டனக் கூட்டத்துக்கு அனுமதி'

இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.

பொன்சேகா விடுதலையான விதம்: ஜேவிபி அதிருப்தி


கடந்த நாடாளுமன்றத்தில் ஜேவிபி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட்டதுகடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணியில் பங்கெடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற விதம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

தமிழரசுக்கட்சி மகாநாட்டுக்கு யாழிலிருந்து சென்ற வாகனம் விபத்து- சிவிகே சிவஞானம் காயம்!


தமிழரசுக்கட்சி மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தி லிருந்து சென்ற வான் ஒன்று வாழைச்சேனையில் விபத்து க்குள்ளானது. இதில் பயணம் செய்த யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளரும், யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது
சி.வி.கே சிவஞானம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார். முச்சக்கர வண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை.

தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..


முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.

ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.

இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு - பொன்சேகா என்ன சொல்கிறார்?


இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது - சரத் பொன்சேக்காஇனப்பிரச்சினைக்காகன தீர்வை எழுத்து மூலம் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் நிதானமாக சிந்தித்து, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை கட்டாயமாக முன்வைக்க வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
 அத்துடன் வடக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கை சிவில் நிர் வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவம்

படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவம்
படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியாக இந்த அறிக்கையை நோக்குவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.